தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதல்முறை... மாமல்லபுரத்தில் "சர்வதேச பட்டம் விடும்விழா"; இசைக்கச்சேரிக்கும் ஏற்பாடு! - சென்னை

தமிழ்நாட்டில் முதல்முறையாக "சர்வதேச பட்டம்விடும் திருவிழா" வரும் 13-ம் தேதி மாமல்லபுரத்தில் தொடங்குகிறது. இதில் பல்வேறு நாடுகளைச்சேர்ந்த குழுக்கள் இதில் பங்கேற்கின்றனர்.

தமிழ்நாட்டில் முதல் முறையாக "சர்வதேச பட்டம் விடும் திருவிழா"
தமிழ்நாட்டில் முதல் முறையாக "சர்வதேச பட்டம் விடும் திருவிழா"

By

Published : Aug 10, 2022, 8:08 PM IST

Updated : Aug 10, 2022, 9:10 PM IST

சென்னை:தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக்கழகத்தின் சார்பில் ''சர்வதேச பட்டம் விடும் திருவிழா'' சென்னை அருகே மாமல்லபுரத்தில் வரும் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. அமெரிக்கா, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்டப்பல்வேறு நாடுகளை சார்ந்த சுமார் 100 குழுக்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.

இந்த திருவிழாவில் பலூன் வடிவில் இருக்கும் பல்வேறு விலங்குகள், மீன்கள் மற்றும் பறவைகள் வடிவிலான பட்டங்கள் பறக்கவிடப்பட உள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமாக விற்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறைக்குச்சொந்தமான கடற்கரையை ஒட்டிய 14 ஏக்கர் பரப்பளவில், இந்த ''பிரமாண்ட பட்டம் விடும் திருவிழா'' நடத்தப்பட உள்ளது.

இதில் பெரியவர்கள், சிறியவர்கள் என அனைத்து வயதினரும் கலந்து கொள்ளலாம். பெரியவர்களுக்கு 150 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. ''சர்வதேச பட்டம் விடும் திருவிழா'' நடைபெற உள்ள இடத்தில் பல்வேறு விதமான இசைக்கச்சேரிகள், உணவுத் திருவிழா போன்றவையும் நடைபெற உள்ளதால், இது பொதுமக்களுக்கு மிகுந்த பொழுதுபோக்கு அம்சமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாடுகளில் ஆண்டுதோறும் கொண்டாடப்படக்கூடிய இந்த திருவிழா இந்தியாவில் குஜராத், கர்நாடகா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களிலும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் முதல்முறையாக இந்த ஆண்டு சுற்றுலாத்துறை சார்பில் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'முதலமைச்சர் ஸ்டாலினை போன்று மற்ற மாநிலங்களும் பரிசுத்தொகை அறிவிக்க வேண்டும்' - செஸ் பயிற்சியாளர் வேண்டுகோள்

Last Updated : Aug 10, 2022, 9:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details