தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீல வான தூய காற்று தினம்: காற்று மாசில் முன்னேறும் இந்தியா.. ஓர் ஆண்டுக்கு உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா? - united nations organisation

International Day of Clean Air for Blue Skies: காற்று மாசுபாட்டால் நாம் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? ஐ.நா சபையின் நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு..

international-day-of-clean-air-for-blue-skies
‘நீல வானுக்கான தூயக்காற்று சர்வதேச நாள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 7, 2023, 4:04 PM IST

‘நீல வானுக்கான தூயக்காற்று சர்வதேச நாள்

சென்னை:'நீல வானுக்கான தூயக்காற்று சர்வதேச நாள்' இன்று(செப்.7) உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின் படி நம் வாழும் புவியானது, நீரால் மட்டும் சூழவில்லை, தற்போது உலகின் பல்வேறு நாடுகள் மாசுகள் சூழ் உலகாக மாறியிருக்கிறது.

ஐநா சபை தீர்மான அறிக்கை:இதையொட்டி பல்வேறு நாட்டினரும்,காற்று மாசை குறைப்பதை பற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு இது குறித்து ஐநா சபை பல தீர்வுகளை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, 2030 ஆம் ஆண்டுக்குள் காற்று, நீர் மற்றும் மண்ணில் உள்ள இரசாயனங்கள் போன்ற மாசுக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் வியாதிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்."அனைவருக்கும் சுத்தமான காற்று" வழங்கிட அனைத்து நாடுகளும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தை ஐ.நா.ஏற்றுக்கொண்டது.

இது குறித்து ஐநா-வின் தீர்மான அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, காற்றின் தரம் பற்றிய ஆராய்ச்சி மற்றும் தரவுகளை சேகரிப்பதற்கும், காற்று மாசுபாட்டை குறைப்பதற்கான தீர்வுகளைக் கண்டறிவதற்கும் வலுவான சர்வதேச அளவில் ஒத்துழைப்பை ஐநா கோரியுள்ளது. காற்றின் தரப் பிரச்சனைகள் பற்றிய பொது விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேரவேண்டும், மேலும், காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை குறைக்க சுத்தமான காற்று உதவும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

காலநிலை பிரச்சனையின் தீவிரத்தை குறைக்க சுத்தமான காற்று தேவைப்படுகிறது என்று ஐ,நா.தரப்பில் தெரிவிக்கப்ட்டிருந்தாலும். காற்று மாசை நாம் புரிந்துக் கொள்ள குறைந்தது ஒரு நூற்றாண்டு பின்நோக்கி சென்றால்,காற்றின் மாசை நாம் புரிந்த கொள்ள முடியும்.

சுத்தமான காற்று குறித்து விழிப்புணர்வு இல்லை:19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலகம் முழுவதும், தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள் எண்ணில் அடங்காதவை, அதேப்போல், அந்த தொழிற் சாலைகளால் ஏற்பட்டு இருக்கும் புவி, நீர், காற்று ஆகிய மாசுகள் எண்ணில் அடங்காதவையாக இருந்து வருகிறது. இதில், இந்திய நாடு காற்று மாசில் உலக அளவில் முதல் ஐந்து இடத்தில் உள்ளது என்பது வேதனை அளிக்கிறது.

2019ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி அன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஒரு தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. இதன் மூலம் செப்டம்பர் 7ம் தேதி நீல வானத்திற்கான சர்வதேச சுத்தமான காற்று தினம் அனுசரிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. "அனைவருக்கும் சுத்தமான காற்று" என்ற கருப்பொருளுடன் 2020 ஆம் ஆண்டின் முதல் சர்வதேச தினம் அனுசரிக்கப்பட்டது. ஆனால் இதைப் பற்றி மக்களிடைய தெளிவான விழிப்புணர்வு இல்லை. என்பது வேதனையாக அளிக்கிறது.

காற்று மாசுப் பட்டியலில் முன்னேறும் இந்தியா:இது குறித்து பூவுலகின் நண்பர்கள் சூழலியல் பொறியாளர் பிரபாகரன் வீரஅரசு, கூறியதாவது, " நீல வானத்தற்கான தூய்மை காற்று தினம் அனுசரிக்கப்படுகிறது. கால நிலை பிரச்சனை எவ்வளவு முக்கிய பிரச்சனையாக பேசப்படுகிறதே, அதேப்போல, காற்று மாசும் தற்போது உலக அளவில் வளர்ந்து வரும் நாடுகள் சந்தித்து வருகிறது. சர்வதேச நாடுகள் ஒத்துழைப்போடு காற்றின் மாசுபாட்டை குறைத்து காற்றின் தரத்தை உயர்த்தவும், பல முன்னடுப்புகளை கையில் எடுத்து இந்நிலையை சரி செய்யவதற்குகாக ஐ.நா. சபை சார்பில் இந்த நில வானத்திற்காக தூய்மையான காற்று தினம் என்று அனுசரிப்பட்டுவருகிறது.

உலக அளவில் பல்வேறு வளரும் நாடுகள் இந்த காற்று மாசை கட்டுப்படுத்த முடியாமல் திணறிக்கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் பல நகரங்களும், இந்த காற்றின் மாசில் பாதிக்கப்பட்டு தான் வருகிறது. உலக அளவில், முதல் பத்து இடத்தில் வந்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக டெல்லி முதலிடத்தை பிடித்து வருகிறது. இந்த காற்று மாசு கட்டுப்படுத்த அரசு தரப்பில் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது. காற்று மாசு அதிகமாக, இருக்கும் இடத்தில் எல்லாம், காற்று தரத்தை உயர்த்துவது குறித்து ஆய்வுகள் நடத்தி வருகின்றன". என்றார்.

காற்று மாசு ஆண்டுக்கு 2 லட்சம் உயிரிழப்பு:இது குறித்து பூவுலகின் நண்பர்கள் வெற்றிச்செல்வன் கூறியதாவது, "இந்தியாவில் மட்டும் காற்று மாசால் வருடம் தோறும், 2,00,000 மக்கள் இறந்து போகின்றனர். என்று உலக சுகாதார அமைப்பின்(WHO) அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் மட்டும் அதிக அளவில், நுரையிரல் பாதிப்பு அதிக அளவுக்கு மக்கள் பாதிக்க படுகின்றனர். காற்றில் நச்சுத்தன்மை குறைவாக இருக்க வேண்டும் அதற்கு என்று அளவுக்கோல் உள்ளது. ஆனால் இந்தியாவில் டெல்லி, மிகவும் காற்று மாசின் பிடியில் இருந்து வருகிறது. இதற்காக பல்வேறு நடவடிக்கை எடுக்கபட்டாலும் தீர்வு என்பது கேள்வி குறியாக இருக்கிறது.

காற்றின் மாசுக்கு முக்கியமானது, இரண்டு விஷயங்கள், ஒன்று வாகனங்கள்,மற்றோன்று தொழிற்சாலைகள் தான்,. இரண்டாவது பார்த்தால், பட்டாசுகள், குப்பைகளை ஏறித்தல் போன்றவை. இந்த இரண்டும் காற்றி மாசுக்கு காரணமாக இருந்து வருகிறது. அதேப்போல், அனல்மின் நிலையங்களும் காற்று மாசு அடைய ஒரு காரணமாக இருந்து வருகிறது. சென்ற வருடத்தில் மட்டும் வட சென்னையில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் காற்று மாசுக்கு 50-கோடிக்கு மேல் அபராதம் போடப்படுள்ளது. அந்த அபராத தொகையானது, பசுமை நிவாரணம் என்று பெறப்படுகிறது.

அந்த பசுமை நிவாரணத்தில் இருக்கும் தொகையானது, எந்த இடத்தில் பெறப்பட்டதோ அந்த இடத்தில் பசுமைக்காவும், அல்லது காற்று மாசை கட்டுப்படுத்த செலவிட்டால் பலன் கிடைக்கும்.காற்று மாசு குறித்து அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்." அதேப்போல் பட்டாசு, குப்பை ஏறித்தல், போன்ற விஷயங்களில் அதிக விழிப்புணர்வு தேவை, ஒரே நாளில், ஒரு நாடே பட்டாசு வெடித்தால், காற்றின் தரம் எப்படி இருக்கும். அதற்கு பதிலாக கீரின் பட்டாசுகளை அரசாங்கம் கொண்டுவரலாம்.காற்று என்பது ஒரு அற்புதமான ஒன்று அதை பாதுகாப்பது என்பது அனைவரும் தலையாய கடமை ஆகும்" என்றார்.

காற்று மாசு கவனம் தேவை:காற்று மாசுபாட்டால் ஓசோன் படலம் ஓட்டை, உலக வெப்பமயமாதல், அமில மழை, மனிதர்களுக்கு நுரையீரல் புற்றுநோய், தோல் நோய்கள் ஏற்படுகின்றன. எனவே இந்த நாளில் காற்றை மாசுபடுத்தும் வழிமுறைகளை கண்டறிந்து, மாசுபாட்டை குறைத்து சுற்றுசூழலை பாதுகாப்போம்.

இதையும் படிங்க:MK Stalin: "உதயநிதி கூறியது குறித்து விவரம் புரியாமல் பிரதமர் மோடி கருத்து" - முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!

ABOUT THE AUTHOR

...view details