சென்னை: திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், கே.என்.நேரு, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர். மாநிலம் முழுவதும் திமுகவின் 15-வது உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருவது குறித்தும் அடுத்த மாதம் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.