சென்னை: மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார். இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்வது நேற்று (ஜூலை 13) தொடங்கியது.
வழக்கமாக நீட் தேர்வில் 180 கேள்விகள் இடம்பெறும். அதில் ஒவ்வொரு கேள்விக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் 720 மதிப்பெண்கள் வழங்கப்படும். தற்போது இந்த ஆண்டு முதல் அதில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதன்படி ஒவ்வொரு பாடத்திலும் ஏ பிரிவில் 35, பி பிரிவில் 15 என நான்கு பாடங்களுக்கு தலா 50 கேள்விகள் வீதம் மொத்தம் 200 கேள்விகள் இடம் பெறவுள்ளன. இவற்றில் 180 கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டும்.