தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த அனுமதி! - உயர்நீதிமன்றம்

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்த விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்கிய சென்னை உயர் நீதிமன்றம், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் அமலாக்கத்துறை விசாரனை நடத்த அனுமதி
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் அமலாக்கத்துறை விசாரனை நடத்த அனுமதி

By

Published : Aug 4, 2022, 8:38 PM IST

சென்னை:கடந்த 2002-2006ஆம் ஆண்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2006ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

இந்நிலையில் சட்டவிரோதப்பணபரிமாற்றம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கப் பிரிவு, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தியது. மேலும், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்குச்சொந்தமான 6 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை கடந்த பிப்ரவரி மாதம் முடக்கியது.

சொத்துகளை முடக்கியதற்கு எதிராகவும், தனக்கு எதிராக அமலாக்கப்பிரிவு பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரியும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கதுறை விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, இதே புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதால், இந்த வழக்கின் விசாரணையைத் தள்ளி வைக்கவேண்டும் என அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 9ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், அமலாக்கத்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டனர். மேலும், விசாரணைக்கு அழைத்தால் நேரில் ஆஜராகி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:சசிகலாவிற்கு எதிரான செல்வ வரி வழக்கு முடித்து வைப்பு - ஏன் தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details