தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேகர்பாபுவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் தடை

2011 சட்டப்பேரவைத் தேர்தலின்போது நடைபெற்ற தேர்தல் தகராறு தொடர்பான சேகர்பாபுவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

அமைச்சர் சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபு

By

Published : Oct 8, 2021, 1:55 PM IST

சென்னை:2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது, சென்னை, கொடுங்கையூரில் உள்ள எம்ஜிஆர் நகர்ப் பகுதியில், திமுகவின் அப்போதைய மாவட்டச் செயலாளர் பி.கே. சேகர்பாபு, லோகநாதன், கணேசன், சரஸ்வதி, பிரபு ஆகியோர் பணப்பட்டுவாடா செய்ததாகக் கூறி அதிமுகவைச் சேர்ந்த குமார், ஜெயபால், லதா, சீனிவாசன் ஆகியோர் தடுக்க முயன்றனர். இதில் இருதரப்புக்கும் இடையே தகராறு வெடித்தது.

தொடர்ந்து இருதரப்பினர் மீதும் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் இரு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. எழும்பூர் நீதிமன்றத்தில் இருந்த வழக்கு 2019ஆம் ஆண்டு எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், வழக்கில் முன்னிலையாக விலக்கு கோரியும், விசாரணைக்குத் தடைவிதிக்கக் கோரியும், வழக்கை ரத்துசெய்யக் கோரியும் சேகர்பாபு உள்ளிட்ட திமுகவைச் சேர்ந்த ஐவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னதாக வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்வழக்கில் சேகர்பாபு உள்ளிட்டோர் முன்னிலையாக விலக்கு அளித்தும், விசாரணைக்குத் தடைவிதித்தும் உத்தரவிட்டதுடன், காவல் துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 22ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க:ரெப்போ வட்டியில் மாற்றமில்லை.. யாருக்கு லாபம்... உச்சத்தில் பங்குச் சந்தை!

ABOUT THE AUTHOR

...view details