தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிகர் விமல் படத்துக்கு இடைக்கால தடை!

சென்னை: நடிகர் விமல் நடிப்பில் இன்று (நவ.27) வெளியாகவிருந்த 'கன்னி ராசி' திரைப்படத்திற்கு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கன்னிராசி திரைப்படத்துக்கு இடைக்கால தடை
கன்னிராசி திரைப்படத்துக்கு இடைக்கால தடை

By

Published : Nov 27, 2020, 1:06 PM IST

நடிகர் விமல் நடிப்பில் உருவான திரைப்படம் 'கன்னி ராசி'. 'கிங் மூவி மேக்கர்ஸ்' தயாரிப்பில் உருவான இப்படத்தின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான விநியோக உரிமை 'மீடியா டைம்ஸ்' நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இதற்காக, படத் தயாரிப்பாளர் ஷமீன் இப்ராஹிமுக்கு, 17 லட்சம் ரூபாயை மீடியா டைம்ஸ் நிறுவனர் அல்டாப் ஹமீது வழங்கியுள்ளார்.

ஆனால், ஒப்பந்தத்தின் போது உறுதியளித்ததை போல கடந்த 2018 ஆம் ஆண்டுக்குள் படத்தை ஷமீன் இப்ராஹிம் வெளியிடவில்லை. இந்த நிலையில், 'கன்னி ராசி ' திரைப்படம் இன்று(நவ.27) வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி' வினியோக உரிமைக்காக, தன்னிடம் 17 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு, வேறு நிறுவனம் மூலமாக படத்தை வெளியிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும் எனவும், தன்னிடம் பெறப்பட்ட தொகைக்கு வட்டியுடன் சேர்த்து, 21 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என உத்தரவிடக்கோரி, 'மீடியா டைம்ஸ்' நிறுவனம் சார்பில் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி செல்வகுமார், 'கன்னி ராசி' திரைப்படம் வெளியாக இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த மனு தொடர்பாக டிசம்பர் 7ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு கிங் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் ஷமீன் இப்ராஹிமுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணை ஒத்திவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details