சென்னை மாநகராட்சி ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”கடந்த மாதம் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்ற தீவிர தூய்மை பணிகள் மூலம் 3ஆயிரத்து 260 மெட்ரிக் டன் குப்பை கழிவுகளும், 10 ஆயிரத்து 85 மெட்ரிக் டன் கட்டட கழிவுகள் என 13ஆயிரத்து 345 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் ஜூன் 26ஆம் தேதி வரை தீவிர தூய்மை படுத்தும் பணிகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதே போல் சென்னை குடிநீர், கழிவு நீரகற்றும் வாரியம் மூலம் கழிவு நீர் கால்வாய் தூர்வாரும் பணிகள் ஜூன் 30ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள 15 மண்டலங்களிலும் மொத்தம் 454 கழிநீர் அகற்று வாகனங்கள் மூலம் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.