சென்னை:மே முதல் வாரத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு , 11 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள நடைபெறுகின்றன. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளை ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்கி மே 2-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும், மே 4ஆம் தேதிக்குள் செய்முறை தேர்வு மதிப்பெண் விவரங்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டுமென தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா உத்தரவிட்டுள்ளார்.
அன்பில் மகேஷ் ஆலோசனை:இதனிடையே, ஏப்ரல் 4, 5 தேதிகளில் சென்னையில் நடைபெறும் முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தவுள்ளார். மேலும் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா, 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான எழுதப்படாத வெள்ளை விடைத்தாள்களை, அனைத்து தேர்வு மையங்களுக்கும் ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் 9ஆம் தேதிக்குள் கொண்டு சென்றுவிட வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.