சென்னை:தமிழ்நாட்டில் வங்கி கணக்கு இல்லாத குடும்ப அட்டைதாரர்கள், புதிதாக வங்கி கணக்கு தொடங்குவதற்கு முன்னதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அதில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களிடம் பாஸ் புத்தகத்தின் நகல், அதில் குடும்ப தலைவர் பெயர் மற்றும் குடும்ப அட்டை எண்ணை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும் என கூட்டுறவுத்துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்றை கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ளது. அதில், ஏற்கனவே வங்கி கணக்கு வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரர்களை சம்பந்தப்பட்ட கடை பணியாளர்கள் நேரில் சந்திக்க வேண்டும். வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்த வேண்டும் என்று அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டிசம்பர் 5 ஆம் தேதி முதலமைச்சர் டெல்லி பயணம்