தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகளிர் விடுதிகளில் கண்காணிப்பு கேமரா பெருத்தப்படுவதை உறுதிசெய்ய உத்தரவு - Install cctv camera’s

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள 502 மகளிர் விடுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள், உபகரணங்கள் பொருத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Nov 12, 2020, 6:41 PM IST

தமிழ்நாடு முழுவதும் 37 மாவட்டங்களில் உள்ள 502 பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மகளிர் விடுதிகளில் இரண்டாயிரத்து 510 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது.

அரசு நிறுவனமான எல்காட் இருக்கும் நிலையில் அந்த நிறுவனத்தின் மூலமாக திட்டத்தை செயல்படுத்தாததால், அரசு வெளியிட்ட டெண்டரை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர் செந்தில்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம். சத்யநாராயணன், ஆர். ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, டெண்டர் நடவடிக்கைகளில் கலந்துகொள்ளாத மனுதாரருக்கு இந்த வழக்கை தொடர எந்த அடிப்படை உரிமையும் இல்லை, தமிழ்நாடு வெளிப்படையான டெண்டர் சட்டப்படி பிறபடுத்தப்பட்ட நலத்துறை இயக்குநர் தலைமையில் குழு அமைத்து நியாயமான டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் உத்தரவிட்ட நீதிபதிகள், டெண்டரை எதிர்த்து வழக்குத் தொடர மனுதாரருக்கு உரிமையில்லை எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தனர். மேலும், நியாயமான, வெளிப்படைத்தன்மையான நடவடிக்கைகளைப் பின்பற்றி மகளிர் விடுதிகளில் தரமான கண்காணிப்புக் கேமராக்களும், உபகரணங்களும் பொருத்துவதை உறுதிசெய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசிற்கு உத்தரவிட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details