தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அன்னிய மரங்கள் அகற்றப்படுகிறதா? - நீதிபதிகள் நேரில் ஆய்வு செய்வதாக அறிவிப்பு! - Chennai news tamil

Madras HC: அன்னிய மரங்கள் அகற்றப்படுகிறதா என்பதை இம்மாதம் நேரில் ஆய்வு செய்ய இருப்பதாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளான சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

Chennai high court
Chennai high court

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 14, 2023, 7:59 AM IST

சென்னை: சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவிடக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று (அக்.13) மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அரசின் அறிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், ஒரே நேரத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்றும், இது சம்பந்தமாக பிறப்பித்த உத்தரவை அரசு அமல்படுத்தவில்லை என்றும் குறிப்பிட்டனர். மேலும், “பல ஆண்டுகளுக்கு முன் சீமைக் கருவேல மரங்களை அகற்ற அரசாணை பிறப்பித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. தனியாருடன் இணைந்து செயல்படவும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவுகள் ஏதும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

மரங்கள் அகற்றுவதற்கு அரசாணை பிறப்பிக்க கூட 6 மாத காலம் ஏற்படுகிறது. நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், எப்போதோ செயல்படுத்தி இருக்கலாம். உதாரணமாக, ஒரு பஞ்சாயத்து அல்லது ஒரு மாவட்டத்தை தேர்வு செய்து, சீமைக் கருவேல மரங்களை முழுமையாக அகற்ற வேண்டும்” எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறியதை அடுத்து, விசாரணையை இம்மாத இறுதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், அன்னிய மரங்கள் அகற்றப்பட்டுள்ளதா என்பதை இம்மாதம் நேரில் ஆய்வு செய்ய இருப்பதாகத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:சென்னையில் 'இந்தியா கூட்டணி மகளிர் மாநாடு'.. கனிமொழி தலைமையில் ஏற்பாடுகள் தீவிரம்.. முதலமைச்சர் நேரில் ஆய்வு!

ABOUT THE AUTHOR

...view details