1992ஆம் ஆண்டு முதல் இந்திய - அமெரிக்க நாடுகளின் கடற்படை கூட்டுப்பயிற்சியானது மலபார் பயிற்சி என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஐப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளும் இணைந்துள்ளன. இந்த கடற்படைகளின் கூட்டுப்பயிற்சிகளானது தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் 26ஆவது பன்னாட்டு கடல்சார் பயிற்சியானது ஜப்பான் யோகோசுகா கடற்பகுதியில் ஐந்து நாள்கள் நடைபெற்றது. இந்தப் பயிற்சி கடந்த 15ஆம் தேதி நிறைவடைந்தது. இந்திய கடற்படையின் கப்பல்களான ஷிவாலிக் மற்றும் கமோர்டா ஆகியவை, இந்த கூட்டுப்பயிற்சியில் பங்கேற்றன.
யோகோசுகா கடற்பகுதியில் நடத்தப்பட்ட இந்தப் பயிற்சியில் நேரடி ஆயுத துப்பாக்கிச்சூடு, வான் எதிர்ப்பு மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு போன்ற போர் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் இந்த நான்கு நாட்டின் கடற்படைகளும் ஒன்றோடு ஒன்று செயல்படுவதை ஒருங்கிணைந்து போர் தந்திர யுக்திகளை பரிமாறிக்கொள்ளவும் இந்தப் பயிற்சியானது உதவியதாக இந்திய கடற்படைத்தெரிவித்துள்ளது.
மலபார் 22 கூட்டு போர் கடற்படை பயிற்சி நீண்ட தூர கடல் ரோந்து விமானம், ஹெலிகாப்டர்கள் மற்றும் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்கள் இப்பயிற்சியில் பங்கேற்றன. இந்த கடற்பயிற்சி வீடியோ காட்சிகளை கோவையில் உள்ள INS அக்ரானி (இந்திய கடற்படை) வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க:சாக்லேட் வீசப்பட்டதில் பாடகர் ஹாரி ஸ்டைல்ஸ் கண்ணில் காயம்