சென்னையில் கரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு அறிக்கை வெளியிடப்பட்டு, அவையே பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், “நாளை (ஏப்.22) முதல் புகாரளிக்க மனித உரிமைகள் ஆணையத்தின் நுழைவு வாயிலில் புகார் பெட்டிகள் வைக்கப்படும். அதில் காலை 10 மணி முதல் மாலை 3 மணிக்குள் புகார் மனுவை சமர்ப்பிக்க வேண்டும்.
முன் அனுமதியின்றி ஆணைய அலுவலகத்திற்குள் யாருக்கும் அனுமதி இல்லை. அனுமதி தேவை என்றால் இரண்டு நாட்களுக்கு முன்னதாக மனுதாரர்கள் விண்ணப்பித்து உரிய அனுமதி பெற வேண்டும்.