திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாகவும், கட்டாய கருக்கலைப்பு செய்ததாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது தமிழ் திரைப்பட துணை நடிகை ஒருவர் காவல் துறையில் மே 28ஆம் தேதி புகார் அளித்திருந்தார்.
இதனால் அவரைப் பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந் நிலையில் மதுரை உள்ளிட்ட இடங்களில் அவரைத் தேடி வந்தனர். முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்பிணை மனுவை உயர் நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அவரைப் பிடிக்க காவல் துறையினர் தீவிரம் காட்டி வந்தனர்.
இந்தச் சூழலில் மணிகண்டனை தனிப்படை காவல் துறையினர் பெங்களூருவில் வைத்து இன்று (ஜுன்.20) அதிகாலையில் கைது செய்துள்ளனர்.