தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அடுத்த 2 நாள்களில் எங்கெங்கு மழை பெய்யும்? - inner tamilnadu districts possible to rain with thunder

வெப்பச்சலனம் காரணமாக இன்றும் நாளையும் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் தமிழ்நாடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 2 நாள்களில் எங்கெங்கு மழை பெய்யும்?
அடுத்த 2 நாள்களில் எங்கெங்கு மழை பெய்யும்?

By

Published : May 30, 2021, 3:39 PM IST

சென்னை:இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் :

ஜுன்.02,03: மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் தமிழ்நாடு மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் ஆகியப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.

வெப்பநிலை முன்னறிவிப்பு

அடுத்த இரண்டு தினங்களுக்கு தமிழ்நாட்டில் மதுரை, திருச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அதிகப்பட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

சென்னையில் வெப்பநிலை

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். அதிகப்பட்ச வெப்பநிலை 40 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 4 செ.மீ அளவு மழைப் பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

மே.30, 31: குமரிக்கடல் மற்றும் இலங்கையின் தெற்கு கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மே.30, 31:கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மே.30, 31:தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்டத் தேதிகளில் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'யாஸ்' புயலுக்கும் கன்னியாகுமரிக்கும் என்ன தொடர்பு? - சிறப்பு அலசல்

ABOUT THE AUTHOR

...view details