தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ரூ.153.97 கோடி ஒதுக்கீடு! - Tamilnadu budget 2020

சென்னை: தகவல் தொழில்நுட்பத் துறைக்கு 2020-21ஆம் நிதியாண்டில் மொத்தமாக 153.97 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

information-technology announcement in tamilnadu budget 2020
information-technology announcement in tamilnadu budget 2020

By

Published : Feb 14, 2020, 2:49 PM IST

தமிழ்நாடு நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சட்டப்பேரவையில் இன்று தாக்கல்செய்த பட்ஜெட்டில் தகவல் தொழில்நுட்பம் குறித்த அறிவிப்புகளையும் வெளியிட்டார். அவை பின்வருமாறு:

தகவல் தொழில்நுட்பத் துறைக்கு 2020-21இல் மொத்தமாக 153.97 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மூலம் கோயம்புத்தூரில் 100 கோடி ரூபாய் செலவில் 2.50 லட்சம் சதுர அடி கூடுதல் அலுவலக பரப்பும் திருச்சியில் 40 கோடி ரூபாய் செலவில் 1 லட்சம் சதுர அடி கூடுதல் அலுவலக பரப்பும் நிறுவப்படும்.

அரசு சேவைகளைத் தடையின்றி வழங்கவும் அனைத்து அரசு துறைகளுக்கும் ஒரே மாதிரியான தரவுகள் கிடைக்க உதவும் வகையிலும் தமிழ்நாடு மாநில குடும்பத் தரவுத்தளம் உருவாக்க 47.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க:தமிழ்நாடு பட்ஜெட் 2020: மூலதன செலவுக்காக சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு

ABOUT THE AUTHOR

...view details