சென்னை:பள்ளிக்கல்வித்துறை சார்பில் முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி மதிப்பெண் சதவீதம் மிகவும் குறைவாக இருப்பதை கண்டு மிகவும் வருத்தம் அடைந்துள்ளனர்.
இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு தேசிய அளவிலான அடைவுத்தேர்வில் பின்தங்கிய நிலையில் உள்ளது. பள்ளிக்குழந்தைகளுக்கான கல்வியின் தரத்தை உயர்த்தி தரமான கல்வியை கொடுக்க வேண்டும்; இதற்காக குறைந்த மதிப்பெண் பெற்ற பள்ளிகளை கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.
அதேபோல் பள்ளிகல்வித்துறை ஆணையர் நந்தகுமார், சென்னை, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டத்தில் 2021-22 ஆம் கல்வியாண்டை விட 2022-23 ஆம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. 2021-22 ஆம் கல்வியாண்டைவிட 2022-23 ஆம் கல்வியாண்டில் 1 வகுப்பு மாணவர்களின் சேர்க்கை நீலகிரி, சென்னை, திருப்பத்தூர் மாவட்டங்களில் குறைவாக உள்ளது.
மேலும் திருப்பத்தூர், பெரம்பலூர், நாகப்பட்டிணம் மாவட்டங்களில் மாணவர்கள் சேர்க்கை அதிகளவிலான பள்ளிகளில் நடைபெறவில்லை என்றும் சிவகங்கை, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில் அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கிறது என்றும் தகவலும் வெளியாகி இருக்கிறது.
இதையும் படிங்க:பொதுத் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களின் மதிப்பெண் சதவீதம் குறைவு