கரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்து நிதி வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு அவர்கள் எடுக்கக்கூடிய தொடர் நடவடிக்கைகளால் வரும் நாள்களில் பெருந்தொற்று நிச்சயமாக குறையக் கூடிய வாய்ப்பு ஏற்படும்” என்று தெரிவித்தார்.