தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தை நாய் கடித்து இறப்பு! - born baby died in chennai

சென்னை: பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை நாய் கடித்து இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

infant death
infant death

By

Published : Jun 10, 2020, 9:50 PM IST

சென்னை குரோம்பேட்டையை அடுத்த மும்மூர்த்தி நகர் அருகே ஏரி ஒன்று உள்ளது. இதில் அந்தப் பகுதி மக்கள் தொடர்ந்து குப்பைகளை கொட்டி வருவது வழக்கம்.
இந்நிலையில் இன்று காலை அப்பகுதியில் குப்பை கொட்டு வதற்காக ஒருவர் சென்றுள்ளார்.

அப்போது அந்த இடத்தில் பிறந்து சில மணி நேரமே ஆன தொப்புள் கொடியுடன் ஒரு குழந்தையை ஒன்றை நாய் கடித்து கொண்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து குரோம்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

இந்த தகவலின் பேரில் குரோம்பேட்டை காவலர்கள் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த குழந்தையின் சடலத்தை மீட்டு குரோம்பேட்டை பொது அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: கரோனாவைக் கட்டுப்படுத்த கூடுதலாக 2834 சுகாதாரப் பணியாளர்கள்

ABOUT THE AUTHOR

...view details