தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஆக.31) தொழில் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி,
- தென் மாவட்டங்கள் பொருளாதார வளர்ச்சி அடையும் வகையில் விருதுநகர் மாவட்டம் குமாரலிங்கபுரம் சிப்காட் பூங்காவில் 250 ஏக்கர் பரப்பளவில் 400 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் ஒருங்கிணைந்த ஆடை பூங்கா உருவாக்கப்படும்.
- கிருஷ்ணகிரி, சூளகிரி சிப்காட் தொழில் பூங்காவில் 300 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் இந்தியாவிலேயே முதன்முறையாக வருங்கால நகர் திறன் பூங்கா உருவாக்கப்படும்.
- திருவள்ளூர் மாவட்டம் கெங்காத்தா குளத்தில் 570 ஏக்கர் பரப்பளவில் 250 கோடி ரூபாயில் அடிப்படை மற்றும் சிறப்பு உள்கட்டமைப்பு வசதிகளுடன் புதிய சிப்காட் தொழில் பூங்கா உருவாக்கப்படும்.
- இயற்கை சூழலை பாதுகாத்திடவும் தொழிற்சாலைகளின் செயல்பாடு மேம்படவும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் 150 கோடி ரூபாய் மதிப்பில் 10 சிப்காட் தொழில் பூங்காக்கள் மேம்படுத்தப்படும்.
- சிப்காட் தொழில் பூங்காக்கள் நீர் ஆதாரத்தில் தன்னிறைவு பெறவும், நீர்நிலைகளைச் சுற்றிலும் பசுமை சூழல் உருவாகும் பொருட்டு சிப்காட் தொழில் பூங்காக்கள் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள நீர்நிலைகள் 100 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்படும்.
- சிறுசேரி மற்றும் பர்கூர் சிப்காட் தொழில் பூங்காக்களில் சிறப்பு வசதிகளுடன் பணிபுரியும் மகளிருக்கு விடுதிகள் அமைக்கப்படும்.
- தொழில் துவங்கும் கால் அத்தனையும் முதலீடு செலவையும் குறைத்து உடனடியாக தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக முதற்கட்டமாக 5 ஏக்கர் பரப்பளவில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் சதுரஅடி கட்டுமான பரப்பில் காஞ்சிபுரம் மாவட்டம் நெமிலியில் தயார் நிலையில் உள்ள தொழிற்சாலைகள் 40 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
- சர்வதேச தரத்திலான ஜவுளி பூங்கா ஒன்று சிப்காட் மூலம் கரூர் மாவட்டத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும்.
- பாதுகாப்பு தொழில் பெருவழி திட்டத்தில் கூடுதல் முதலீட்டை ஈர்க்கும் விதமாக 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னையில் உள்ள ரேடியோ அதிர்வலை, ஆண்டனா தோல்விகளுக்கான பொது சோதனை வசதி மையம் உளுந்தூர்பேட்டையில் ஆளில்லா விமானத் தொழிலுக்கான பொது சோதனை வசதி மையம் அமைக்கப்படும்.
- வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் 50 கோடி ரூபாய் மதிப்பில் உற்பத்தி தொழிலுக்கான பொது சோதனை வசதி மையம் திருச்சியில் அமைக்கப்படும்.
- வானூர்தி மற்றும் பாதுகாப்புத் துறையில் புதிய முதலீடுகளை ஈர்க்கவும், அத்துறையில் ஏற்பட்ட மாற்றத்திற்கு ஏற்பவும் திருத்தப்பட்ட தமிழ்நாடு வானூர்தி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை வெளியிடப்படும்.
- தொழில் நிறுவனங்கள் பொருட்களை நுகர்வோருக்கு தங்கு தடையின்றி கொண்டு செல்ல ஏதுவாக ஒருங்கிணைந்த மாநில சரக்கு போக்குவரத்திற்கான திட்டம் தயாரிக்கப்படும்.
- புத்தக வளர்ச்சிக்கும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களில் முதலீடுகளை அதிக அளவில் ஈர்த்து வேலைவாய்ப்பை பெருமளவில் அதிகரிக்கும் பொருட்டு தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கொள்கை வெளியிடப்படும்.
- வணிகம் புரிதலை எளிதாக்கிடவும் முதலீட்டாளர்கள் தொழில் துவங்க தேவையான அனைத்து அனுமதிகளையும் உடனுக்குடன் பெற்று தங்களது திட்டத்தினை விரைவாகவும் எளிதாகவும் செயல்படுத்துவதற்கு ஏதுவாக ஒற்றைச்சாளர இணையதளம் 2.0 கைபேசி செயலி உருவாக்கப்படும்.
- மின்சார வாகனங்கள் உற்பத்தியிலும் உபயோகத்திலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தேவைகள் மற்றும் பயன்பாடுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மின்னேற்றுக் கட்டமைப்புகளை ஊக்குவிக்கும் வகையிலும் திருத்தப்பட்ட மின் கொள்கை வெளியிடப்படும்.
- செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வழி எழுத்து முறையில் இயங்கக் கூடிய சிறப்பு தடுக்கிதழ் ( PAN VALVE) 20 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்படும்.
- செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் பெரம்பலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் புதியதாக் கோள் கல பல் சக்கர பெட்டிகள் 39.55 ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்படும்.
- சர்க்கரை வைத்திருக்கும் செலவை குறைக்கவும் ஆலைகளின் பணப்புழக்கத்தை அதிகரித்திடவும் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் 170 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 60 கிலோ லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு எத்தனால் ஆலைகள் நிறுவப்படும்.
- அரவை உருளை பழுதால் ஏற்படும் அரவை நேர இழப்பைத் தவிர்ப்பதற்காக கள்ளக்குறிச்சி ஒன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் புதிய லோட்டஸ் உருளை 25.62 லட்சம் ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்படும்.
- உப்பு உற்பத்தியை அதிகரிக்க ராமநாதபுரம் மாவட்டம் வாலி நோக்கத்தில் இயந்திரங்கள் மூலம் உப்பு எடுக்கும் வகையில் உப்பு பாத்திகள் 80 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
- வெளிச்சந்தையில் 'நெய்தல்' என்ற வணிக பெயரில் உப்பு அறிமுகப்படுத்தப்படும்.
- முதல்முறையாக திருப்போரூரில் 500 ஏக்கர் பரப்பளவில் 5.90 கோடி ரூபாயில் உப்பு உற்பத்தி தொடங்கப்படும்.
- உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்களின் குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணமாக ஆண்டுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும்.
- உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்கு தேவைப்படும் அதிக அளவு சிமெண்ட், மிக குறுகிய காலத்தில் கொண்டு சேர்க்கும் வகையில் 100 டன் ஏற்று திறன் கொண்ட சிமெண்ட் மொத்தமாக ஏற்றும் அமைப்பு சுமார் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அரியலூரில் உள்ள புதிய ஆலையில் ஏற்படுத்தப்படும்.
- புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை பயன்படுத்தி மின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக ஆலங்குளத்தில் 10 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் சக்தி ஆலை ஒன்று 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.
- பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை ஆகிய பிரிவுகளில் முன்னணி கல்வி நிறுவனங்களை அடையாளம் கண்டு வளர்ந்து வரும் தொழில்களுக்கு தேவைப்படும் உயரிய தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு புதிய பாடத்திட்டங்கள் வடிவமைப்பு செய்திடவும், பயிற்சி வகுப்புகள் நடத்திடவும், அனுபவ ரீதியில் கற்றாழை ஊக்குவித்து விடவும், வழிகாட்டி நிறுவனத்தில் ஒரு சிறப்பு பணி ஆய்வக பிரிவு அமைக்கப்படும்.