கடந்த டிசம்பர் 20ஆம் தேதி இந்தோனேசியால் இண்டர்நேஷனல் கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா, மலேசியா, சீனா, இலங்கை உள்பட ஆறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பகேற்று போட்டியிட்டனர். இந்த ஆறு நாடுகளிலிருந்து மொத்தம் 400பேர் கலந்துகொண்டனர். இந்தியா சார்பில் 10 மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். தமிழகத்தை சேர்ந்த ஐந்து மாணாக்கர்கள் கலந்துகொண்டு ஐந்து வெள்ளி, ஐந்து வெண்கல பதக்கங்களை வென்றனர்.
பின்னர் நாடு திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு சென்னை விமான நிலையத்தில் பெற்றோர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து பயிற்சியாளர் கார்த்திகேயன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “போட்டி பல்வேறு பிரிவுகளாக நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 5 வெள்ளிப் பதக்கமும்,5 வெண்கலப் பதக்கமும் வென்றனர். போட்டி மிகவும் கடினமாக இருந்தது. கடுமையான பயிற்சி மேற்கொண்டதால் இந்த வெற்றி சாத்தியமானது.