தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'11ஆம் வகுப்பிற்கு மறைமுகமாக நுழைவுத்தேர்வு என்பது எந்த வகையிலும் ஏற்க இயலாது' - பதினொன்றாம் வகுப்பிற்கு மறைமுக நுழைவுத் தேர்வு

சென்னை: 11ஆம் வகுப்பிற்கு மறைமுகமாக நுழைவுத் தேர்வு என்பது எந்த வகையிலும் ஏற்க இயலாது எனப் பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

exam
exam

By

Published : Jun 8, 2021, 10:27 PM IST

இது குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறியுள்ளதாவது, "தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறையில், 11ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் குறிப்பிட்டப் பிரிவிற்குச் சேர்க்கைக்கான இடங்களைவிட மிக அதிகமான விண்ணப்பங்கள் வரப்பெற்றால், அந்தப் பாடப்பிரிவிற்கு விண்ணப்பித்தவர்களுக்குத் தொடர்புடைய கீழ்நிலைப் பாடத்திலிருந்து 50 வினாக்கள் தயார்செய்து தேர்வு நடத்தி அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நோய்த் தொற்று காலக்கட்டத்தில் படிக்க ஆர்வத்துடன் குறிப்பிட்டப் பிரிவில் சேர அரசுப் பள்ளியை நாடிவரும் மாணவரை வடிகட்டி, அப்பிரிவை மறுப்பது நியாயமற்றது.

அரசுப் பள்ளிகளில் தேவை ஏற்படின் கூடுதல் வகுப்புகள் தொடங்க அறிவுறுத்தாமல், மாணவர் கோரும் பிரிவை மறுப்பது நியாயமற்ற அணுகுமுறை. கூடுதல் வகுப்புகள் தொடங்க அரசிடம் பணம் இல்லையா அல்லது போதிய அளவு ஆசிரியர்களை நியமிக்க, தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் தமிழ்நாட்டில் இல்லையா? பதினொன்றாம் வகுப்பிற்கு மறைமுகமாக நுழைவுத் தேர்வு என்பது எந்த வகையிலும் ஏற்க இயலாது.

சமூகநீதி அடிப்படையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு, அதே பள்ளியில் பத்தாம் வகுப்புப் படித்த மாணவர்கள் அதே பள்ளியில் விரும்பும் பாடப்பிரிவில் சேர்க்கப்பட வேண்டும். அதற்கு அடுத்ததாக பள்ளியின் அருகில் வசிப்பவர்கள் கோரும் பிரிவை மறுக்காமல் வழங்க வேண்டும்.‌ மிக அதிக அளவில் விண்ணப்பம் வரப்பெற்றால் கூடுதல் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும்.

அதற்குரிய அனுமதியை அரசு அளித்திட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளைப் பரிசீலித்துப் பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது எனக் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details