தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் அதிமுக சர்வாதிகார போக்கு... ஸ்டாலின் காட்டம்

சென்னை: ஜனநாயகம் பாதுகாக்கப்பட முடியாத சூழலில் அதிமுக மேயர் தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளது என்றும் இது கண்டிக்கத்தக்கது எனவும் திமுக ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

dmk stalin

By

Published : Nov 20, 2019, 11:16 PM IST

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேயர், நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அவசர சட்டம் பிறப்பித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், இதனை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகிறது.

தற்போது, இது குறித்து அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "நான்கு நாள்களுக்கு முன்பு முதல்வர் எடப்படி பழனிசாமி மேயர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று உறுதியோடு கூறினார்.

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மேயர் தேர்தல் நேரடி தேர்தலாக இல்லாமல் மறைமுக தேர்தலாக நடத்தலாம் என்பது குறித்து பேசப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இன்று மதியம் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அப்படியெல்லாம் எதுவும் பேசவில்லை. அப்படியிருந்தால் நாங்களே சொல்வோம் என்று தெளிவாக சொல்லிவிட்டு சென்றார்.

ஆனால், இன்று மாலை அதற்கான சட்ட திருத்தம் பிறப்பித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. திமுக-வை பொறுத்தவரையில் இதை ஒரு சர்வாதிகாரத்தோடு ஜனநாயகம் பாதுகாக்கப்பட முடியாத சூழ்நிலையில் இந்த தேர்லை நடத்துவதற்காக அதிமுக திட்டமிட்டிருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.

இதைச் சொன்னால் உங்களுடைய ஆட்சியில் நீங்கள் நடத்தவில்லையா? என்று கேள்வி கேட்பார்கள். உண்மைதான். அது அன்றைக்கு இருந்த சூழ்நிலை. அதுமட்டுமல்ல அதனால் உள்ளாட்சி அமைப்புகளில் சுதந்திரமாக பணியாற்ற முடியாத சூழ்நிலை இருந்து வந்தது. அதனால்தான் மீண்டும் மாற்றப்பட்டது.

மேயர் மறைமுக தேர்தலை கண்டித்த ஸ்டாலின்

மாநகராட்சி மேயராக இருந்தாலும் சரி, நகராட்சி, பேரூராட்சி தலைவராக இருந்தாலும் சரி அது மக்களால் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய வகையில் நடத்துவதுதான் சிறப்பாக இருக்கும். எனவே இது கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details