சென்னை அடுத்த பல்லாவரம் வள்ளுவர் பேட்டை பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இப்பகுதியில் உள்ள கால்வாய்யில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீரானது சாலைகளில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரச் சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், பல மாதங்களாக இப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தெருக்களில் வெளியேறுகிறது. இதுகுறித்து பல்லாவரம் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கும் போதெல்லாம், அலுவலர்கள் அலட்சியம் காட்டுகின்றனர் எனக் குற்றஞ்சாட்டினர்.