தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நான்கு சிறப்பு விமானங்கள் மூலம் சென்னை வந்த இந்தியர்கள் - Rescue of Indians stranded abroad

சென்னை: சிங்கப்பூா், துபாய், குவைத், கத்தாா் நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியா்களில் 706 போ் மீட்கப்பட்டு 4 சிறப்பு மீட்பு விமானங்களில் சென்னை அழைத்துவரப்பட்டனர்.

chennai
chennai

By

Published : Jul 22, 2020, 11:31 AM IST

கரோனா பரவல் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உலகளவில் கரோனா பாதிப்பு ஒரு கோடியே 50 லட்சத்து 96 ஆயிரத்து 317ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 19ஆயிரத்து 520ஆக அதிகரித்துள்ளது. 91லட்சத்து 13ஆயிரத்து 43 பேர் குணமடைந்துள்ளனர். எனவே, கரோனா வீரியமடைந்து வரும் நிலையில், வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை சிறப்பு விமானம் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், கத்தாா் நாட்டின் தோகா நகரிலிருந்து சிறப்பு மீட்பு விமானம் 203 இந்தியா்களுடன் சென்னை வந்தது. இதில், 166 பேர் ஆண்கள், 24 பெண்கள், ஒன்பது சிறுவர்கள், நான்கு குழந்தைகள் உள்ளிட்டோருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து, அரசு இலவச தங்குமிடங்களான விஐடிக்கு 126 பேரும், கட்டணம் செலுத்தி தங்குமிடங்களான ஹோட்டல்களில் 77 பேரும் 14 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டனர்.

அதேபோன்று துபாயிலிருந்து சிறப்பு விமானம் மூலம் 179 பேர் சென்னை வந்தனர். இதில், 120 ஆண்கள், 43 பெண்கள், ஒன்பது சிறுவர்கள், ஏழு குழந்தைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும், சிங்கப்பூரிலிந்து சென்னை வந்த சிறப்பு விமானம் மூலம் மூன்று சிறுவர்கள் உள்பட 145 பேர் சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தனர். தற்போது மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக குவைத்திலிருந்து வந்த 176 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர். இதன் மூலம் மொத்தம் 706 பேர் சிறப்பு விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர்.

இதையும் படிங்க:வெடிபொருளை உட்கொண்ட மாடு பலத்த காயம்

ABOUT THE AUTHOR

...view details