உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் கூட்டுப்பாலியல் படுகொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்துவருகிறது. இந்த நிலையில் அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தஞ்சை தெற்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ரயிலடி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஹத்ராஸ் சம்பவத்தை கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம்! - Indian Union Muslim League in thanjavur
தஞ்சாவூர்: உ.பி. கூட்டுப்பாலியல் படுகொலையை கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர்
இந்த ஆர்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் ஜெய்னுல் ஆபிதீன் தலைமை தாங்கினார். அதிரை நகர செயலாளர் ஹாஜி முனாப், திமுக எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன், டி.கே.ஜி நீலமேகம், காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் என ஏராளமானோர் கலந்துகொண்டு கண்ட உரையாற்றினர்.
இதையும் படிங்க:திமுக எம்எல்ஏ பூங்கோதையின் பதவியை பறிக்க வேண்டும் - பேரவைத் தலைவருக்கு முஸ்லிம் லீக் கடிதம்!