தமிழ்நாடு

tamil nadu

'இந்தியன் அந்நியனாக மாட்டான்; அந்நியன் இந்தியனாக முடியாது'

By

Published : Feb 29, 2020, 5:57 PM IST

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இந்தியன் அந்நியனாக மாட்டான்; அந்நியன் இந்தியனாக முடியாது என்பதுதான் பிரதமர் மோடியின் தாரக மந்திரம் என மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார்.

சசிகலா புஷ்பா
சசிகலா புஷ்பா

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, ”சிஏஏ போன்ற நாட்டிற்குத் தேவையான ஒரு சட்டத்திற்கு எதிராக வேண்டுமென்றே திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வதந்திகளை பரப்பி வன்முறையை கட்டவிழ்த்து விடுகின்றன. பொய் பிரசாரங்கள் மூலம் இந்துக்களை வெறுக்கச் செய்யும் திமுகவை மக்கள் புறக்கணிப்பார்கள். தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க திமுக கனவு கூட காண முடியாது.

மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா

பிரதமர் மோடி இஸ்லாமியர், கிறிஸ்துவர்கள் ஆகியோருக்கு எதிரானவர் அல்ல. இஸ்லாமிய குழந்தைகளிடம் புத்தகத்தைக் கொடுத்து மதராசா கல்வி நிறுவனத்திற்கு அனுப்புங்கள் எனக்கூறி ரூ. 5 ஆயிரத்து 500 கோடி அதற்களித்தவர் பிரதமர் மோடி. குடியுரிமை திருத்தச் சட்டத்தைப் பொறுத்தவரை ’இந்தியன் அந்நியனாக மாட்டான்; அந்நியன் இந்தியனாக முடியாது’ என்பதுதான் தாரக மந்திரம். அதுவே மோடியின் தாரக மந்திரமும் கூட.

குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் யாருக்கும் பாதிப்பு கிடையாது. அந்தச் சட்டத்தை பார்த்து பயப்பட வேண்டியவர்கள் பயங்கரவாதிகள். பாஜகவில் அடிப்படை உறுப்பினராகயிருக்கிறேன். அக்கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்லும் பணியைச் செய்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சசிகலா புஷ்பா ஆய்வு

ABOUT THE AUTHOR

...view details