தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

100 ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கி இந்திய ரயில்வே சாதனை! - இந்திய ரயில்வே சாதனை

சென்னை: கரோனா பரவலின் காரணமாக ஏற்படும் உயிரிழப்பை தடுப்பதற்காக இந்திய ரயில்வே 100 ஆக்ஸிஜன் வாகனத்தை ரயில்களை இயக்கி சாதனை படைத்துள்ளது.

இந்திய ரயில்வே சாதனை
இந்திய ரயில்வே சாதனை

By

Published : May 12, 2021, 11:35 PM IST

இது குறித்து இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

'இந்திய ரயில்வே இதுவரை 100 ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்கி, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு மருத்துவ ஆக்ஸிஜனை கொண்டு சேர்த்துள்ளது. மே 11 மட்டும் 800 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் தேவையான பகுதிகளுக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.

இதுவரை மகாராஷ்டிரா மாநிலத்திற்கு 407 மெட்ரிக் டன், உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு சுமார் 1680 மெட்ரிக் டன், மத்தியப் பிரதேசத்திற்கு 360 மெட்ரிக் டன், ஹரியானாவிற்கு 939 மெட்ரிக் டன், தெலங்கானாவிற்கு 123 மெட்ரிக் டன், ராஜஸ்தானுக்கு 40 மெட்ரிக் டன், கர்நாடகாவிற்கு 120 மெட்ரிக் டன், டெல்லிக்கு 2404 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான ஆக்ஸிஜன் ரயில் மூலம் கொண்டு சேர்க்கப்பட்டது.

ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள டாட்டா நகரிலிருந்து 120 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் முதல் முறையாக உத்தரகாண்ட் மாநிலத்திற்குச் சென்று சேர்ந்துள்ளது. புனே நகருக்கு ஒடிசாவிலிருந்து 55 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் மே 11 இரவு ரயில் மூலம் வந்து சேர்ந்துள்ளது.

இந்த ஆக்ஸிஜன் வழங்கும் பணியைத் தொய்வில்லாமல், இந்திய ரயில்வே தொடர்ந்து நடத்தி வருகிறது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details