கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில், மருத்துவமனைகளின் வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கையில் இந்திய ரயில்வே ஈடுபட்டுள்ளது.
ரயில்வேக்கு சொந்தமான நான்கு ஆக்ஸிஜன் ஆலைகள் செயல்பாட்டில் உள்ளன. மேலும் 52 ஆக்ஸிஜன் ஆலைகளை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அவற்றில் 30 ஆக்ஸிஜன் ஆலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. அனைத்து ரயில்வே கோவிட் மருத்துவமனைகளிலும், ஆக்ஸிஜன் வசதிகள் அமைக்கப்படவுள்ளன.
இது குறித்து இந்தியன் ரயில்வே வாரியம் , "ஒவ்வொரு ஆக்ஸிஜன் ஆலை அமைப்பதற்கும் ரூ.2 கோடி வரை அனுமதிக்க பொது மேலாளர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ரயில்வே மருத்துவமனை மேம்பாட்டுக்காக பல நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. கோவிட் சிகிச்சைக்கான படுக்கைகளின் எண்ணிக்கை 2,539-லிருந்து 6,972-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவிட் மருத்துவமனைகளில் ஐசியு படுக்கைகளின் எண்ணிக்கை 273-லிருந்து 573-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வென்டிலேட்டர்களின் எண்ணிக்கை 62-லிருந்து 296-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில்வே மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் போன்றவை வழங்க தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன" என தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.50 கோடி ஒதுக்கி முதலமைச்சர் உத்தரவு!