சென்னை:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ‘சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்’ போட்டி சென்னையில் 15ஆம் தேதி தொடங்கிய நிலையில் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் இத்தொடரின் 3வது சுற்று ஆட்டம் இன்று (டிச.17) நடைபெற்றது.
இந்த ஆட்டத்தை அமெரிக்க தூதரகத்தின் நிர்வாகி ஆன, சமந்தா ஜாக்சன் தொடக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில், 3 ஆட்டம் டிராவிலும், அர்ஜுன் எரிகைசி மற்றும் அலெக்சாண்டர் ப்ரெட்கே மோதிய ஆட்டத்தில், அர்ஜுன் வெற்றி பெற்றார்.
3வது சுற்றின் முடிவில் சனான் சுகிரோவ், ஹரிகிருஷ்ணா ஆகியோர் தலா 2 புள்ளிகளுடன் முதல் இரு இடங்களில் உள்ளனர். லெவோன் அரோனியன் , பாவெல் எல்ஜனோவ், குகேஷ், அர்ஜுன் எரிகைசி தலா 1.5 புள்ளிகள் கொண்டு அடுதெடுத்த இடங்களில் உள்ளனர். இதைத் தொடர்ந்து, அலெக்சாண்டர் ப்ரெட்கே மற்றும் பர்ஹாம் மக்சூட்லூ ஆகியோர் தலா ஒரு புள்ளியுடன் 7 மற்றும் 8 ஆவது இடத்தில் உள்ளனர்.
3வது சுற்றில், அர்ஜுன் எரிகைசி அலெக்சாண்டர் ப்ரெட்கே மோதியதில் , அர்ஜுன் எரிகைசி வெள்ளை காய்களுடன், ஆட்டத்தை தொடங்கினார். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தி, அர்ஜுன் தனது 71வது நகர்வில், அலெக்சாண்டர் ப்ரெட்கேவை தோற்றடித்தார்.