தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்தியன் வங்கி: 155 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு - காலிபணியிடங்கள்

சென்னை: நாடு முழுவதும் உள்ள இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 155 பாதுகாவலர் பணியிடங்களை நிரப்பும் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Indian bank

By

Published : Nov 4, 2019, 10:21 AM IST

நாடு முழுவதும் உள்ள இந்நியன் வங்கிகளில் காலியாக உள்ள 155 பாதுகாவலர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாநிலம் வாரியாக காலிப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டிற்கு மட்டும் 48 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதில், பொதுப்பிரிவினருக்கு 23 இடங்களும், பிற்படுத்தபட்டோர், மிகவும் பிற்படுத்தபட்டோர் பிரிவினர் ஆகியோருக்கு 12 இடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 4 இடங்களும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 9 இடங்களும் என மொத்தம் 48 பணியிடங்கள் இட ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது.

இப்பணிக்கு மாதம் ரூ.9,560 முதல் ரூ.18,545 வரை ஊதியமாக வழங்கப்படும். இத்தேர்விற்கு விண்ணப்பிக்க 01.07.2019 தேதியின்படி 45 வயதுக்கும் மிகமால் இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஒட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

முப்படைகளில் ஏதேனும் ஒரு பிரிவில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும். இதில் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, மொழித்திறன் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தத் தேர்வுக்கு www.indianbank.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க 08.11.2019 தேதி அன்று கடைசி நாளாகும். விண்ணப்பிக்கப்பட்ட படிவத்தை நகல் எடுத்து வைத்துக் கொள்ளவும். மேலும் விவரங்கள் அறிய https://www.indianbank.in/wp-content/uploads/2019/10/Detailed-advertisement-for-recruitment-of-Security-Guard-cum-Peon.pdf என்ற லிங்கை பயன்படுத்தவும்.

இதையும் படிங்க:குரூப்-2 பணிக்கு நேர்காணல் தேதி அறிவிப்பு வெளியானது!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details