தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்தியன் வங்கி கிளை மேலாளருக்கு மூன்று ஆண்டுகள் சிறை... நடந்தது என்ன?

சென்னை: போலி ஆவணங்கள் மூலம் வீட்டுக் கடன் வழங்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், இந்தியன் வங்கி கிளையின் முன்னாள் மேலாளர் சீனிவாசனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

By

Published : Sep 30, 2019, 11:09 PM IST

imprisonment

அரக்கோணம் கலிவாரி நகரில் 4.67 ஏக்கர் பரப்பளாவில் 68 அரசு ஊழியர்களுக்கு வீடு கட்டுவதற்காக, போலி ஆவணங்கள் மூலம் இந்தியன் வங்கி அரக்கோணம் கிளையில் ரூ.3.27 கோடி வீட்டுக் கடன் பெற்றது.

2005ஆம் ஆண்டு நடந்த இந்த முறைகேடு, 2010ஆம் ஆண்டு நடந்த தணிக்கையில் தெரியவந்ததை அடுத்து, வங்கி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில், வங்கி கிளை மேலாளர் சீனிவாசன், வழக்கறிஞர் நாகபூஷணம் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜவஹர், தகுதியில்லாதவர்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் கடன் வழங்கி மோசடியில் ஈடுபட்டது நிரூபணமாகியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட சீனிவாசன், நாகபூஷணம் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், இருவருக்கும் ரூ.10 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களை விடுதலை செய்தும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க: ரகசிய வீடியோ எடுத்த காதலனுக்கு தக்க பாடம் புகட்டிய காதலி!

ABOUT THE AUTHOR

...view details