தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முத்தூட் மைக்ரோஃபின் நிறுவனத்துடன் இணைந்த இந்தியன் வங்கி! - கடன் சேவை வழங்கும் திட்டம்

சென்னை: கடன் சேவை வழங்கும் திட்டத்தை தொடங்குவதற்காக முத்தூட் மைக்ரோஃபின் நிறுவனத்துடன் இந்தியன் வங்கி இணைந்துள்ளது.

முத்தூட் மைக்ரோஃபின் நிறுவனத்துடன் இணையும் இந்தியன் வங்கி

By

Published : Nov 10, 2019, 11:45 AM IST


சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் இந்தியன் வங்கி, முத்தூட் மைக்ரோஃபின் நிறுவனத்துடன் இணைந்து கடன் சேவை வழங்கும் திட்டத்தை தொடங்கவுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் சிறு, குறு நிறுவனங்களின் முதலாளிகள் குறைந்த வட்டியில் கடன் வசதி பெற முடியும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியன் வங்கியின் சிறு, குறு கடன் பிரிவின் பொது மேலாளர் சுதாகர் ராவ், முத்தூட் மைக்ரோஃபின் நிறுவனத்தின் துணை தலைமை நிதி அலுவர் பிரவீன் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்நிகழ்ச்சியில், இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பத்மஜா சந்துரு உடனிருந்தார்.

அண்மையில் இந்தியன் வங்கியுடன் அலாஹாபாத் வங்கியை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : திருச்சி கூட்டுறவு வங்கி கொள்ளை: சிசிடிவி காட்சி!

ABOUT THE AUTHOR

...view details