சென்னை:இந்திய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக இன்று (செப்.28) காலமானார். அவர் இந்தியாவில் உணவு பஞ்சத்தை போக்க பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார். மேலும், இது குறித்து பல பொன் மொழிகளையும் அவர் தெரிவித்துள்ளார். அதில்,
- விவசாயத்தில் பூச்சி மருந்துகள் பயன்பாடு குறித்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சியே விவசாயிகள் மற்றும் விவசாயத்தைப் பாதுகாக்க மிகவும் முக்கியமானது.
- இந்திய விவசாயத்திற்கு பெரும் சவாலாக சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரம் உள்ளன. அதேபோல் நிலம், நீர், பல்லுயிர் ஆகியவற்றை பாதுகாப்பதும் சவாலாக உள்ளன. விவசாயத்தை நிலையானதாக மாற்றுவதிலும் பல சவால்கள் உள்ளன.
- உணவுப் பாதுகாப்பின் எதிர்காலம், விவசாய நிலங்களின் வளம் மற்றும் பாதுகாப்பில் உள்ளது என்ற புரிதல் இருந்தாலும், விவசாய நிலங்கள் குறைந்து வருகிறது.
- விவசாயம் பருவமழையைப் பொறுத்து அமைவதால், உலகில் ஆபத்தான தொழிலாக உள்ளது.
- விவசாயம் சார்ந்த பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதே விவசாயத்திற்கு அறிவுப்பூர்வமாக பயனளிக்கும்.
- இயற்கையோடு ஒருவருக்கொருவர் ஒத்துப்போக விரும்ப வேண்டும்.
- தொழில்நுட்பம் மூலம் விவசாயத்தில் உற்பத்தியும், முன்னேற்றமும் பெற முடியும். ஆனால், பொதுக்கொள்கையால் மட்டும் விவசாயிகள் வருமானத்தை உயர்த்த முடியும்.
- கடந்த கால சூழல் மற்றும் இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றம் நாளைய உணவுப் பாதுகாப்பில் அடங்கியுள்ளது.
- நாட்டிலுள்ள 700 மில்லியன் மக்களின் வாழ்வாதாரமாக விவசாயம் உள்ளது. நம் உணவின் பாதுகாப்பு, வீட்டில் வளர்க்கும் உணவு சார்ந்த செடிகளின் அடித்தளத்தில் உள்ளது.
- விவசாயம் பொய்த்தால், வேறு எதுவும் சரியாக நடக்க வாய்ப்பில்லை.