சென்னை:44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியாவில் முதன்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் போட்டிகளை நடத்த திட்டமிட்டு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் போட்டியில் பங்கேற்க இந்தியா சார்பில் இரண்டு ஆடவர் அணிகள், இரண்டு மகளிர் ஆணிகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து இன்று (ஜூலை 3) மூன்றாவது இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், கிராண்ட் மாஸ்டர்கள் சூர்ய சேகர் கங்குலி, கார்த்திகேயன் முரளி, எஸ்.பி சேதுராமன், அபிஜீத் குப்தா மற்றும் அபிமன்யு பூராணிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.