தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 27, 2020, 7:04 PM IST

ETV Bharat / state

'இலங்கை போர்க்குற்றம் தொடர்பான ஐநா விசாரணையில் இந்தியா தலையிட வேண்டும்'

சென்னை : ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை தொடர்பான போர்க்குற்ற விசாரணையை மேற்கொள்ள இலங்கை அரசை வலியுறுத்தும் ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் நிலைப்பாட்டை இந்தியா ஆதரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

India should intervene in UNHRC investigation into Sri Lankan war crimes - Dr. Ramadoss
இலங்கை போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா விசாரணையில் இந்தியா தலையிட வேண்டும் - மரு. ராமதாஸ்

2009ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப்போரின் போது நிகழ்த்தப்பட்ட மனித குலத்திற்கு எதிரான யுத்தம், போர்க்குற்றங்கள் குறித்த நடைபெற்றுவரும் பன்னாட்டு விசாரணையிலிருந்து விலகிக் கொள்வதாக ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை அறிவித்திருக்கிறது.

இந்நிலையில் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், ”ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐநா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய இலங்கை அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, ’முந்தைய மைத்திரிபால சிறிசேன அரசு, சில நாடுகளை மகிழ்விக்கும் எண்ணத்தோடு இலங்கை மக்களுக்கு விருப்பம் இல்லாத போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை பேரவையில் கொண்டுவந்தபோது ஏற்றது. இந்தத் தீர்மானத்தை கோத்தபய அரசு திரும்பப் பெற விரும்புகிறது. தீர்மானம் திரும்பப் பெறப்பட்ட பிறகு இலங்கையில் அமைதியை ஏற்படுத்த தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படும்’ என அவர் கூறியுள்ளார்.

இலங்கை போர்க்குற்றம் தொடர்பான ஐநா விசாரணையில் இந்தியா தலையிட வேண்டும்
ஈழப்போர் முடிந்து 11 ஆண்டுகள் ஆகியும் ஈழத்தில் தமிழர்கள் அச்சமின்றி வாழும் நிலை ஏற்படுத்தப்படவில்லை என்பதே உண்மை நிலையாகும். ஈழத்தமிழர்களுக்கும், உலகெங்கும் வாழும் அவர்களின் உறவினர்களுக்கும் இப்போதுள்ள ஒரே ஆறுதல், இலங்கைப் போர்க்குற்ற விசாரணையை தொடர்ந்து மேற்கொண்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பதில் ஐநா மனித உரிமைகள் ஆணையர் உறுதியாக இருப்பதுதான். ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் இந்த நிலைப்பாட்டுக்கு இந்தியா முழு ஆதரவளிக்க வேண்டும்.
ஒரு லட்சத்துக்கும் மேலான அப்பாவித் தமிழர்களைத் தடைசெய்யப்பட்ட பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்தி, கொன்று குவித்த சிங்கள ஆட்சியாளர்கள், சிங்களப் போர்ப்படையினர் உள்ளிட்ட அனைவரும் தண்டிக்கப்படுவதை உறுதிச் செய்ய வேண்டிய கடமை இந்தியாவுக்கு உள்ளது” என அதில் தெரிவித்துள்ளார்.

2018ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஐநா சபையின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்' குறித்த 40/1 தீர்மானத்திற்கு வழங்கிய ஒத்துழைப்பை இலங்கை அரசு திரும்பப் பெறுவதற்கான தீர்மானம் குறித்து மனித உரிமைகள் பேரவையின் தலைவரிடம், இன்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன விவாதிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : மெக்கா செல்லவிருந்த 300 இஸ்லாமியர்கள் சென்னை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்!

ABOUT THE AUTHOR

...view details