சென்னை: இந்தியா - பாகிஸ்தான் இடையே 1971ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியா வெற்றிபெற்றது. 1971ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி 'விஜய் திவாஸ்' இந்தியா- பாகிஸ்தான் போரில் சுமார் 93 ஆயிரம் ஆயுதம் ஏந்திய பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவிடம் சரணடைந்தனர்.
13 நாள்கள் நடந்த கடுமையான போரின் முடிவில் வங்கதேசம் பாகிஸ்தானிலிருந்து விடுதலை பெற்று தனி நாடானது. இந்த வரலாற்றின் 50ஆம் ஆண்டு பொன்விழா நாளை (டிசம்பர் 16) இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.
இது குறித்து தீவுத்திடலில் உள்ள தக்க்ஷின் பாரத் தலைமையகத்தில் ராணுவ தென் பிராந்திய தலைமை அலுவலர் லெப்டினென்ட் ஜெனரல் ஏ. அருண் செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
"குன்னூர் அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்து குறித்து தமிழ் ஊடகம் மிகச் சரியான வகையில் செய்தியை மக்களுக்கு உடனுக்குடன் தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்தார். இந்தியா - பாகிஸ்தான் போரின் பொன்விழாவைச் சிறப்பிக்கும் வகையில் நாளை டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.