தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட்..! - சென்னை மழை

தமிழ்நாட்டில் அடுத்த இரு தினங்களுக்கு (நவ. 10,11) சிவப்பு எச்சரிக்கை (Red Alert) வழங்கப்பட்டுள்ளது.

Red Alert  metrological center  india meteorological department  heavy rain  chennai rain  cyclone  ரெட் அலர்ட்  தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட்  இந்திய வானிலை ஆய்வு மையம்  வானிலை ஆய்வு மையம்  வானிலை அறிக்கை  மீனவர்களுக்கு எச்சரிக்கை  புயல்  சென்னை மழை  சென்னை கனமழை
ரெட் அலர்ட்

By

Published : Nov 9, 2021, 9:44 AM IST

சென்னை: வங்காள விரிகுடாவில் இன்று (நவ.9) உருவாக உள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நவம்பர் 11 ஆம் தேதி அன்று காலை வட தமிழ்நாட்டின் கடலோர பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக உள்ளது.

இதனால், தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரி உள்ள ஏனாம் பகுதிகளில் நவம்பர் 10, 11 ஆம் தேதிகளில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நவம்பர் 10,11 ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்குச் சிவப்பு எச்சரிக்கை (Red alert) விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: ஜி.என்.செட்டி சாலையில் தேங்கிய மழைநீர்; பொதுமக்கள் அவதி - களத்தில் ஈடிவி பாரத்

ABOUT THE AUTHOR

...view details