தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்தியை முன்னிறுத்தினால் இந்தியா பல துண்டுகளாகும் - திருமாவளவன் - விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்

சென்னை:இந்தியை முன்னிறுத்த நினைத்தால் இந்தியா பல துண்டுகளாக உடையும் என சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினர் திருமாவவளவன் கூறியுள்ளார்.

பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் தொல்.திருமாவளவன்

By

Published : Sep 17, 2019, 7:19 PM IST

பெரியாரின் 141ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலை சிம்சன் சிக்னல் அருகில் உள்ள அவரது சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினர் திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார.

பின் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ”விடுதலைப்போராட்டத்தில் இந்தி பேசுகிறவர்கள் மட்டுமன்றி இந்தி அல்லாத பிறமொழி பேசுகிறவர்களும் தியாகம் செய்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், வங்கம், குஜராத்தி, உருது ஆகிய மொழிகளை பேசிய தேசிய இனங்களும் வெள்ளையர்களை எதிர்த்து போராடியுள்ளன. இதை அமித்ஷாவும், மோடியும் நினைவில் கொள்ளவேண்டும். அவர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் வகையிலும் அச்சுறுத்தும் வகையிலும் இருப்பது கண்டிக்கத்தக்கது. ஒரே நாடு ஒரே மொழி என்னும் முழக்கம் இந்தியாவை பல கூறுகளாக துண்டாக்கும் ஆபத்தான முயற்சியாகும். எனவே தேசிய அளவில் அனைத்து ஜனநாயக சக்திகளும் இதனை முறியடிக்க முன் வரவேண்டும்.

ஒரே நாடு ஒரே மொழி என்பதை ஊக்கமளிக்கும் வகையில் இந்தி குறித்து பேசிய அமித் ஷாவின் கருத்திற்கும், 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவித்த தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அமித்ஷா கருத்துக்கு எதிராக திமுக நடத்த இருக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளிக்கும். திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் அனைத்தும் தனித்தனி போராட்டங்கள் வழியே எதிர்ப்புகளை தெரிவிப்பதன் மூலம் சனாதன சக்திகளை எதிர்த்து பலமுனை தாக்குதலை கொடுக்க முடியும்.

பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் தொல்.திருமாவளவன்

காப்பான் இசை வெளியீட்டு விழாவில் காந்தியடிகளை சுட்டுக் கொன்ற கோட்சேவின் துப்பாக்கி உடைக்கப்பட வேண்டும் என்ற பெரியாரின் கருத்தை மேற்கோள் காட்டி நடிகர் சூர்யா பேசிய கருத்து வரவேற்கத்தக்கது. தமிழை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கிறது” என்றார்,

தமிழர்கள் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது தொடர்பாக அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த திருமாவளவன், பொன்.ராதாகிருஷ்ணனின்நன்றியை மோடியும், அமித்ஷாவும் மறந்துவிட்டதாகவும் அவருக்கு மத்திய அமைச்சர் (அ) ஆளுநர் பதவி வழங்கியிருக்க வேண்டும். ஆனால் பொன்.ராநாகிருஷ்ணனை வேண்டும் என்றே மத்திய அரசு புறக்கணிக்கிறது என்றார்.

இதையும் படிங்க:ஒரு மொழியை திணித்தால் ஏற்றுக்கொள்ள மாட்டோம்: கமல்ஹாசன்

ABOUT THE AUTHOR

...view details