சென்னை:எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் 7-வது ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று (ஆகஸ்ட் 06) நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் மலேசியா அணிகள் மோதின. இதில் நான்கு பகுதிகள் கொண்ட ஆட்டத்தில் முதல் பகுதியில் இந்திய அணி தனது முதல் கோலை அடித்தது.
இரண்டாவது கால் பகுதியில் இரண்டு அணிகளும் கோலகள் அடிக்காத நிலையில், மூன்றாவது கால் பகுதியில் இரண்டு கோள்களும், நான்காவது கால் பகுதியில் இரண்டு கோள்களும் அடித்து இந்திய அணி மலேசியாவை பந்தாடியது. இதில் இந்திய அணி வீரர்கள் கார்த்தி செல்வம், ஹர்திக் சிங், ஹர்மன்பிரீத் சிங், குர்ஜந்த் சிங், ஜுக்ராஜ் சிங் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் இந்திய அணி 0-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
ஜப்பான்வுடனான போட்டியில் பெனால்டி கார்னர் (Penalty corner) வாய்ப்பை தவறவிட்ட இந்திய அணி இந்த முறை சரியாக பயன்படுத்திக் கொண்டது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா மூன்று போட்டிகளில் ஏழு புள்ளிகளுடன் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி நிலைப் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
ஆசியன் ஹாக்கி போட்டியில் முதலாவதாக ஆட்டத்தில் இந்திய அணி சீன அணியை 7-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. இரண்டாம் ஆட்டத்தில் ஜப்பானுடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. நேற்றைய போட்டியில் வென்றதன் மூலம் இந்தியா ஏழு புள்ளிகளை பெற்றுள்ளது. இதில், தோல்வி அடைந்ததன் மூலம் மலேசியா ஆறு புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.