பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா விசாவில் இந்தியா வந்த பயணிகள், ஊரடங்கினால் பல்வேறு பகுதிகளில் சிக்கிக் கொண்டனர். இதனால், சுற்றுலா விசாவில் வந்தவர்களால் தங்களது சொந்த நாட்டிற்குத் திரும்ப முடியவில்லை.
இந்நிலையில், சுற்றுலா விசாவில் வந்தவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்குச் செல்ல, கடந்த சில தினங்களாக சென்னையிலிருந்து அமெரிக்கா, பிரான்ஸ், மலேசியா, ஜப்பான், சிங்கப்பூர், பூடான் உள்ளிட்ட நாடுகளுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன.
தமிழ்நாட்டில் மேலும் தங்கியுள்ள வெளிநாட்டுப் பயணிகளை சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்துச் செல்ல, மத்திய அரசு அனுமதியளித்ததைத் தொடர்ந்து, சென்னையிலிருந்து வங்கதேசத் தலைநகரமான டாக்காவிற்கு சிறப்பு விமானம் இயக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 164 பேர் அந்த சிறப்பு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர். முன்னதாக மே 8ஆம் தேதி சென்னையிலிருந்து டாக்காவுக்கு இயக்கப்பட்ட சிறப்பு விமானத்தில் 163 பேர் அழைத்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மலேசியா டூ திருச்சி: தாயகம் திரும்பிய 177 தமிழர்கள்!