தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அகமதாபாத் புறப்பட்ட இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள்! - ipl 2021

சென்னையில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் இருந்து அகமதாபாத் புறப்பட்டனர்.

India, England cricketers leave to Ahmedabad
India, England cricketers leave to Ahmedabad

By

Published : Feb 19, 2021, 6:29 AM IST

இங்கிலாந்து கிரிக்கெட் அணி நான்கு டெஸ்ட், ஐந்து டி-20, மூன்று ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுடன் விளையாடுகிறது. இதற்காக இங்கிலாந்து அணி இந்தியா வந்துள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரையிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரையில் நடைபெற்றது.

இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் அடுத்து நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகள் அகமதாபாத்தில் நடைபெற இருப்பதால் இரு அணி வீரர்களும் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் அகமதாபாத் புறப்பட்டுச் சென்றனர். மேலும் ஐந்து டி20 போட்டிகளும் அகமதாபாத்தில் நடக்கிறது. அதைத்தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டிகள் புனேவில் நடைபெற உள்ளன.

இதையும் படிங்க:

ஆஸ்திரேலியன் ஓபன்: இறுதிப்போட்டியில் மோதும் ஒசாகா, பிராடி!

ABOUT THE AUTHOR

...view details