இந்தியா முழுவதும் 74ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, சென்னை பெருநகர குடிநீர் வாரிய அலுவலகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மேலாண்மை இயக்குநர் ஹரிஹரன் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து மக்கள் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இதைப் போலவே, சென்னை விமான நிலையத்தில் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு நடந்தது. பின்னர் சென்னை விமான நிலைய இயக்குநர் தீபக் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் விமானநிலைய ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
ரிப்பன் மாளிகையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆணையர் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இதன் பின்னர், சென்னை மாநகராட்சி நிர்வாகத்தில் பணிபுரிந்து கரோனா தொற்று பாதிப்பிற்குள்ளாகி மீண்டு பணிக்கு வந்தவர்களை ஆணையர் பிரகாஷ் வாழ்த்தி வரவேற்றார். மேலும், சென்னை மாநகராட்சி முன்களப் பணியாளர்களின் பணியை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தினார். நிகழ்ச்சியில் துணை ஆணையர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.