சென்னை மாநகராட்சி பகுதிகளில் கடந்த சில நாள்களாகவே கரோனா தொற்று பாதிப்பு குறித்த பரிசோதனைகள் 13 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்துவருகிறது.
சென்னையில் அதிகரிக்கும் குணமானோரின் எண்ணிக்கை!
சென்னை: கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதேபோல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இன்றைய நிலவரப்படி (ஜூலை 24), சென்னையில் 6ஆவது மண்டலத்தில் மொத்தம் ஏழு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும், 7ஆவது மண்டலத்தில் 12 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள், 8ஆவது மண்டலத்தில் 22 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள், 9ஆவது மண்டலத்தில் மூன்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள், 10ஆவது மண்டலத்தில் 17 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள், 11ஆவது மண்டலத்தில் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என ஒட்டுமொத்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 62ஆக குறைந்துள்ளது என சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது..
இதையும் படிங்க...அண்ணா நகரில் ஒரே நாளில் 65 மருத்துவ முகாம்கள்