தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டியலின மருத்துவரை சாதியைச் சொல்லி திட்டும் போக்கு அதிகரிப்பு: மருத்துவர்கள் சங்கம் கவலை - chennai news in tamil

பட்டியலின மருத்துவ அலுவலர்கள் சொல்வதை, பட்டியலினம் அல்லாத கீழ்மட்ட மருத்துவ அலுவலர்கள் ஏற்காதபோக்கும், பட்டியலின அலுவலர்களை சாதியைக் குறிப்பிட்டு இழிவாக பேசும் போக்கும் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்தரநாத் தெரிவித்துள்ளார்.

Increased tendency to criticize the schedule caste doctor
பட்டியலின மருத்துவரை சாதியைச் சொல்லி திட்டும் போக்கு அதிகரிப்பு: மருத்துவர்கள் சங்கம் கவலை

By

Published : Jun 6, 2021, 8:48 PM IST

சென்னை:இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா பணி தொடர்பாக பட்டியலின மருத்துவ அலுவலர்கள் சொல்வதை, பட்டியலினம் அல்லாத கீழ்மட்ட மருத்துவ அலுவலர்கள் ஏற்காத போக்கும், பட்டியலின அலுவலர்களை சாதியைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசும் போக்கும் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இத்தகைய பிரச்சனை ஒன்றில், ஒரு பட்டியலின மருத்துவ அலுவலரை, ஓர் இளம் வயது மருத்துவ அலுவலர் இழிவாகத் திட்டியதோடு, சட்டையைப் பிடித்து தாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அவர், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய உறவினர் என்றும் கூறப்படுகிறது. கரோனா பணி தொடர்பாக ஒரு பட்டியலின மருத்துவ அலுவலருக்கும், மற்றொரு இளம் மருத்துவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில், துறைவாரியாகப் பேசி உரிய தீர்வைக் காணாமல், பட்டியலினத்தைச் சேர்ந்த மருத்துவ அலுவலர் மட்டும் கைது செய்யப்பட்டு விழுப்புரம் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.

செந்தில் பாலாஜியின் தலையீடு

அவரது, கைதில் மேல்மட்டத் தலையீடு இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜியின் தலையீடு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் கைது நடவடிக்கை, பட்டியலின மருத்துவர்கள், மருத்துவ அலுவலர்கள் மத்தியில் அச்சத்தையும், பாதுகாப்பற்ற சூழலில் பணிபுரிய வேண்டிய சூழலையும் உருவாக்கி இருக்கிறது.

இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்ட மருத்துவரை உடனடியாக விழுப்புரம் சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும். அவர் மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும்.

இந்நிகழ்வு குறித்து தேசிய பட்டியலினத்தோர் மனித உரிமைகள் ஆணையம் உடனடி விசாரணையை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு சுகாதாரத்துறை இந்நிகழ்வு குறித்து நேர்மையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:பட்டியலின பேராசிரியர்கள் மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை - உண்மை அறியும் குழு

ABOUT THE AUTHOR

...view details