தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலைகளில் வசிப்பவர்களுக்கு மருத்துவ பரிசோதனை - தனிக்குழு அமைக்கக் கோரிக்கை! - நாதியற்றவர்கள்

சென்னை: கரோனா தொற்றின் பாதிப்பு குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் சாலைகளில் தங்கியிருப்பவர்களை கண்டறிந்து மருத்துவ பரிசோதனை நடத்த தனிக்குழு அமைக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Increase mobile testing lab for dwellers, petition filed
Increase mobile testing lab for dwellers, petition filed

By

Published : Apr 29, 2020, 3:52 PM IST

கரோனா தொற்று பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், வீடுகள் இல்லாமல் சாலைகளில் வசித்துவரும் பெரும்பாலானோர் இந்த தொற்றின் விளைவுகள் குறித்த முழுமையான விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றனர். இவர்கள் மூலமாக கரோனா தொற்று வேகமாக பரவும் அபாயம் உள்ளதால், சாலைகளில் வசிப்பவர்களை கண்டறிந்து மருத்துவ பரிசோதனை செய்ய தனிக்குழு அமைக்கக்கோரி திருச்சியை சேர்ந்த வழக்கறிஞர் அமல் ஆண்டனி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், தமிழகத்தில் கரோனா தொற்றை கண்டறிய 41 அரசு மற்றும் தனியார் மையங்கள் மட்டுமே செயல்பட்டு வருவதால், இதுவரை 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த சோதனைகளை துரிதப்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அங்கீகரித்த "BSL-3 VRDL Lab" எனும் நடமாடும் பரிசோதனை மையங்களை எல்லா மாவட்டங்களிலும் அமைக்க வேண்டும். இதன்மூலம் ஒவ்வொரு மையமும் நாள் ஒன்றிற்கு 1,000 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய முடியும். தனியார் மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனை செய்ய 2,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கும் நிலையில், கட்டணத்தை 500 ரூபாயாக குறைக்க நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு அவசர வழக்குகளை விசாரணை செய்யும் நீதிபதிகள் அமர்வு முன் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details