தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை குடிநீருக்கு 115 கன அடி நீர் திறப்பு - சென்னை ஏரிகளில் நீர்வரத்து

சென்னை: கண்டலேறு அணையின் நீர் திறப்பு மற்றும் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

சென்னை குடிநீருக்கு 115 கன அடி நீர் திறப்பு
சென்னை குடிநீருக்கு 115 கன அடி நீர் திறப்பு

By

Published : Oct 20, 2020, 10:36 AM IST

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் மற்றும் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் புழல் மற்றும் சோழவரம் ஆகிய ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

பொன்னேரியில் 28 மில்லி மீட்டர் மழையும், தாமரை பக்கத்தில் 21 மில்லி மீட்டர் மழையும், சோழவரத்தில் 20 மில்லி மீட்டர் மழையும், செங்குன்றத்தில் 21மில்லி மீட்டர் மழையும் என சராசரியாக திருவள்ளூர் மாவட்டத்தில் 11.5 4 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

மேலும் செங்குன்றம் புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில் தற்போது, 2011 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 115 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. இதில் சென்னை மக்களின் குடிநீருக்கென 115 கன அடி நீர் அனுப்பப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details