சென்னை: சனி, ஞாயிறு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை என்று தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருவதால், சொந்த ஊர்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுவதற்கு தென் மாவட்ட மற்றும் கேரள மாநில மக்கள் அதிக அளவில் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து உள்ளனர்.
மேலும், தென் மாவட்டங்களில் கடுமையான மழை வெள்ளத்தில் சிக்கி சாலைகள் சேதமடைந்துள்ளதால், சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ளவர்கள் தொடர் விடுமுறை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு விமானத்தில் செல்ல மிகுந்த ஆர்வம் காட்டி உள்ளனர்.
தென் மாவட்ட மக்கள் மட்டுமின்றி, கேரள மக்களும் அதிக அளவில் செல்வதால், தென் மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்திற்கு செல்லும் அனைத்து விமானங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதையடுத்து, தென் மாவட்டங்கள் மற்றும் கேரளா மாநிலத்திற்குச் செல்லும் விமானங்களில் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன.
இதன்படி, கட்டண விவரங்கள் பின்வருமாறு:
சென்னை - திருவனந்தபுரம் வழக்கமான கட்டணம் ரூ.2,864, தற்போதைய கட்டணம் ரூ.14,065 முதல் ரூ.17,910
சென்னை - கொச்சி வழக்கமான கட்டணம் ரூ.3,018, தற்போதைய கட்டணம் ரூ.15,661 முதல் ரூ.16,124