தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு - மாநகரப் பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை: மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

பேருந்துகள்
பேருந்துகள்

By

Published : Oct 24, 2020, 4:35 PM IST

கரோனா பாதிப்பு காரணமாக பொதுப்போக்குவரத்து முற்றிலுமாக முடக்கிவைக்கப்பட்டது. பின்னர், படிப்படியாக ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு போக்குவரத்து செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயங்கிவருகின்றன.

சென்னையில் மூன்றாயிரத்து 300 பேருந்துகள் உள்ளன. அவற்றில் சாதாரண நாள்களில் சுமார் 33 லட்சதுத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயணம் மேற்கொள்வர். ஊரடங்குக்குப் பிறகு மீண்டும் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டபோது மிகவும் குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டன.

இந்த நிலையில், தற்போது மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ப பேருந்துகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக பேசிய மாநகரப் போக்குவரத்துக் கழக அலுவலர் ஒருவர், "தற்போது நாள்தோறும் தோராயமாக 14 லட்சம் பேர் மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். இதற்காக இரண்டாயிரத்து 500 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஊரடங்கு முடிந்து மீண்டும் பேருந்துகள் இயக்கப்பட்டபோது நாள் ஒன்றுக்கு சுமார் ஆறு லட்சம் மக்களே பயணம் செய்தனர். தற்போது அதிக அளவிலான மக்கள் பயணித்துவருகின்றனர்" என்று கூறினார்.

பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாததாலும், பலரும் வீட்டிலிருந்து பணியாற்றுவதாலும் பேருந்து பயன்பாடு முன்பைவிட குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், பலரும் தனிப்பட்ட வாகனத்தில் வருவதாலும் பேருந்துகளில் கூட்டம் குறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படாததால் அந்த வழித்தடங்களில் அதிக அளவிலான மக்கள் பயணிக்கின்றனர். இதற்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாக அலுவலர்கள் கூறுகின்றனர்.

தற்போது கரோனா முன்னெச்சரிக்கை விதிகளின்படி தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் 50 விழுக்காடு பயணிகளுடனே பேருந்துகள் இயக்கப்படுவதாக அலுவலர்கள் கூறுகின்றனர்.

இருந்தபோதிலும் ஒரு சில வழித்தடங்களில் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க இயலாத வகையில் பயணிகள் கூட்டம் உள்ளதாகப் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details